இயக்குநருக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்த சிவகார்த்திகேயன்

1 mins read
7dddffb3-1e58-419d-8907-dc4751d79543
இயக்குநருக்கு தங்கச் சங்கிலி அணிவிக்கிறார் சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

‘குட் நைட்’ பட இயக்குநரின் திருமண வரவேற்பில் தங்கச் சங்கிலியை பரிசளித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘அமரன்’ படத்தில் நடித்திருக்கும் இவர், அடுத்து ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் நடிக்கிறார். இதன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு வெளியான ‘குட் நைட்’ படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

விநாயக் சந்திரசேகரனுக்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், அவருக்கு தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார்.

சிவகார்த்திகேயனை வைத்து, விநாயக் சந்திரசேகரன் புதிதாக ஒரு படத்தை இயக்க இருப்பதா தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்