ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருக்கும் அம்மன் படத்தில் நயன்தாராவிற்கு பதில் திரிஷாவை நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.
2020ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ படம் வெளிவந்தது. தற்பொழுது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி 2013ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
அதைத்தொடர்ந்து ‘புகழ்’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘தேவி’ போன்ற படங்களில் நடித்தார். 2019ஆம் ஆண்டு வெளியான ‘LKG’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
2020ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியில் வெளியான ‘பதாய் ஹொ’ திரைப்படத்தை தமிழில் மறுபதிப்பு செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
தற்பொழுது ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார். ஆனால், இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இப்படம் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இப்படம் வேறு கதைக்களத்தில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஆர் ஜே பாலாஜி முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கு ‘மாசாணி அம்மன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திரிஷா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கடந்த 2010ஆம் ஆண்டு ராஜமௌலி நகைச்சுவை நடிகர் சுனிலை வைத்து இயக்கிய ‘மர்யதா ராமண்ணா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை அணுகியதாகத் தெரிகிறது.
ஆனால் நகைச்சுவை நடிகருடன் தன்னால் நாயகியாக நடிக்க முடியாது என்று திரிஷா அதை மறுத்து இருக்கிறார். அந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதாம். அதன் பின்னர் அந்தப் படத்தில் நடிக்காமல் விட்டுவிட்டோமே என்று திரிஷா வருத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

