தாயாகப் போகும் தீபிகா படுகோன் ‘கல்கி 2898 AD’ பட விழாவில் கலந்துகொண்டார் தீபிகா படுகோன்.
‘கல்கி 2898 AD’ படம் இம்மாதம் 27ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. எனவே தொடர்ந்து படக்குழுவினர் பல இடங்களில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அதில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டது.
இந்தப் படத்தின் நிகழ்ச்சிக்கு குழந்தையை சுமக்கும் தன் வயிறு தெரியும் விதத்தில் கறுப்பு நிற உடை அணிந்து தீபிகா படுகோன் கலந்துகொண்டார். அவரைப் படக்குழுவினர் மிகவும் அக்கறையுடன் கவனித்து கொள்ளும் காணொளி வெளியாகி உள்ளது.
தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முன்னர் சில நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டாலும் எதிலும் தன்னுடைய கர்ப்பம் தெரியுமாறு உடை அவர் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.