தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த அதிரடி முடிவு

1 mins read
da49bfc0-36e5-4e2c-a645-a9b790ac378b
ஐஸ்வர்யா ராஜேஷ். - படம்: ஊடகம்

அப்பா வயது நடிகருடன் நடிக்க ஐஸ்வர்யா ராஜே‌‌ஷ் அதிரடியாக முடிவெடுத்து இருக்கிறார்.

தற்போது இளம் நாயகிகளும் மனைவி, அம்மா வேடங்களில் நடித்து வருகின்றனர். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து புகழ்பெறுவதும் உண்டு.

ஐஸ்வர்யா ராஜேஷ் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தெலுங்கில் அப்பா வயது உள்ள நடிகர் வெங்கடே‌ஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளது தெலுங்கு சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் வெங்கடேஷ் ‘சைந்தவம்’ படத்தின் தோல்விக்குப் பிறகு அனில் ரவிபுடி இயக்கத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கடே‌‌‌ஷ் அனில் ரவிபுடி இணையும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சக்திவாய்ந்த ராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளார். படத்தில் வெங்கடே‌ஷின் மனைவியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜே‌ஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கெனவே தெலுங்கில் நான்கைந்து படங்களில் நடித்துள்ளார். ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’ படத்தின் மூலம் டோலிவுட்டுக்குள் நுழைந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நாயகியாக, மனைவியாக, குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை

தொடர்புடைய செய்திகள்