தீபாவளிக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’

தீபாவளிக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’

1 mins read
37fb8ea9-b7e3-4ed7-badd-0716428e606c
அஜித். - படம்: ஊடகம்

‘விடாமுயற்சி’ படம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக அஜித்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், ‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’, ‘கலகத் தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு அஜர்பைஜான் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், படக்குழு இதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்

தொடர்புடைய செய்திகள்