தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

50வது படத்தில் கவனம் செலுத்தும் தனு‌‌ஷ்

1 mins read
4aeffcc9-5d83-465b-9ab5-7ae41ba0ac45
தனு‌‌ஷ். - படம்: ஊடகம்

விஜய் சேதுபதியின் 50வது படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து தன்னுடைய 50வது படத்தை வெற்றிப் படமாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தனு‌‌ஷ்.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் ‘இந்தியன் 2’ படம் ஜூலை பன்னிரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.

அதே நாளில் அக்‌ஷய் குமார் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி உள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி பதிப்பான ‘சர்பிரா’ படமும் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சூர்யா, சில காட்சியில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் திரைக்கு வந்து இரண்டு வாரத்திற்கு பிறகு ஜூலை 26ஆம் தேதி தனுஷின் ஐம்பதாவது படமான ‘ராயன்’ திரைக்கு வருகிறது.

தான் இயக்கி நடித்திருக்கும் 50வது படத்தை வெற்றிப் படமாக கொடுத்து விட வேண்டும் என்பதற்காகவே பெரிய அளவில் போட்டியில்லாத நேரத்தில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு வந்த தனுஷ், ஜூலை 26ஆம் தேதி ராயனை வெளியிடுகிறார்.

தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’வைப் போன்று தனது ‘ராயன்’ படத்தையும் வெற்றிப் படமாக்கி விட வேண்டும் என்று தீவிரமாக பட விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார் தனு‌‌ஷ்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்

தொடர்புடைய செய்திகள்