கவர்ச்சி குறித்து விளக்கம் அளித்த ரா‌‌ஷ்மிகா

கவர்ச்சி குறித்து விளக்கம் அளித்த ரா‌‌ஷ்மிகா

1 mins read
f0efb624-3269-41e8-a382-d058525ef92e
ரா‌‌ஷ்மிகா மந்தனா. - படம்: ஊடகம்

ராஷ்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. அதற்கு “எங்கு எப்படி இருக்க வேண்டுமோ அங்கு அப்படி இருந்தால்தான் நன்றாக இருக்கும்,” என்று பதிலடி கொடுத்துள்ளார் ரா‌‌ஷ்மிகா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

இவர் அண்மையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. ரசிகர்கள் புகைப்படத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்திக்கு போனதும் கவர்ச்சியில் எல்லை மீறி விட்டார் என சிலர் விமர்சித்து உள்ளனர்.

இதற்கு பதில் அளித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது, “ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமன்கள் மாதிரிதான் வாழ வேண்டும். இது பெரியவர்கள் சொன்ன வாக்கு. நான் அதை கச்சிதமாக கடைப்பிடிக்கிறேன்.

“பாலிவுட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வாய்ப்புகள் வரும். ஆனாலும் நடிகையாக கவர்ச்சியில் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அவற்றை எப்போதும் மீறமாட்டேன். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழிப் பெண்ணாக மாறிவிடுவது எனக்கு பிடிக்கும்,’’ என்றார் ரா‌‌ஷ்மிகா மந்தனா.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை

தொடர்புடைய செய்திகள்