சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23 என்ற படத்திற்கு ரஜினியின் பாட்டு வரியை வைத்து தான் அவரின் தீவிரமான தொண்டன் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
ஏ.ஆர் முருகதாசின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்திற்கு ‘சிங்கநடை’ என பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ரஜினியின் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு’ என்ற பாடலின் முதல் வரியைத்தான் சிவகார்த்திகேயனின் SK23 படத்திற்கு தலைப்பாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.