விழாவில் பிரபாஸை கடிந்துகொண்ட அமிதாப்பச்சன்

விழாவில் பிரபாஸை கடிந்துகொண்ட அமிதாப்பச்சன்

2 mins read
fdd7979f-45da-4a7d-b85c-a06f8012da55
தீபிகா படுகோன், பிரபாஸ், அமிதாப்பச்சன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விளம்பர நிகழ்ச்சி விழாவிற்கு வந்திருந்தார் கர்ப்பிணியான தீபிகா படுகோன்.

அவரை மேடைக்கு அழைத்ததும் கஷ்டப்பட்டு எழுந்து நிற்க முயன்ற அவருக்கு உதவி செய்ய நடிகர் ராணா ஓடி வந்தார்.

மும்பையில் நடந்த ‘கல்கி 2898 AD’ படவிழாவில் நாயகன் பிரபாஸை பலர் முன்னிலையில் கடிந்துகொண்டார் அமிதாப்பச்சன்.

அதற்குள் அமிதாப் பச்சன் வந்து தீபிகாவின் கையை பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு மேடையில் இருந்து இறங்கியபோது அவரின் கையைப் பிடித்து இறக்கிவிட பிரபாஸும் அமிதாப் பச்சனும் ஒரு பக்கத்தில் இருந்து ஓடி வர, ராணா மறுபக்கத்தில் இருந்து ஓடி வந்தார்.

ஆனால், அதற்குள் தீபிகாவின் கையை பிடித்து அவரை மேடையில் இருந்து இறக்கிவிட்டார் பிரபாஸ்.

அதைப் பார்த்த அமிதாப் பச்சனோ, பிரபாஸை பிடித்துக் கொண்டு, “நான்தான் வருகிறேன் அல்லவா? அதற்குள் நீ முந்திக்கிட்டியே!” என்பது போன்று செல்லமாக சண்டை போட்டார்.

அதை பார்த்து பிரபாஸ், தீபிகா, ராணா மட்டும் அல்ல அரங்கில் இருந்த அனைவரும் சிரித்தார்கள்.

“இதற்கிடையே கர்ப்பிணி செய்யும் வேலையா இது?” என தீபிகா படுகோனை ரசிகர்களை கண்டித்துள்ளனர்.

இப்படி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உயரமான காலணி தேவையா? சாதாரண காலணி போட வேண்டியது தானே? ரன்வீர் சிங் என்ன தான் செய்கிறார்? மனைவியை இதுபோன்ற உயரமான காலணி போட வேண்டாம் என்று கறாராக சொல்லியிருக்க வேண்டாமா?” என்று பதிவிட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்