தனது தந்தையின் பாடல்களைப் பயன்படுத்தும்போது அவரிடம் உரிய அனுமதியைக் கேட்டுப் பெறுவது வழக்கம் என்று கூறியுள்ளார் இளையராஜாவின் மூத்தமகன் கார்த்திக் ராஜா.
‘கிங்ஆப் கிங்ஸ்’ என்ற தலைப்பில் பல்வேறு முக்கியமான நகரங்களில் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தாராம் கார்த்திக் ராஜா. முதல் நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. எனினும் கடைசியில் கைவிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூருக்கு மாற்றாக, தமிழகத்தின் கோவையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் ராஜா, சில குழப்பங்கள் காரணமாக கோலாலம்பூர் நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றார்.
“அங்கு ஏற்பட்ட சில சிக்கல்களால் நிகழ்ச்சி கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் கோவை நிகழ்ச்சியில் அனைத்து இசையமைப்பாளர் களின் பாடல்களும் இடம் பெறும். அப்பா இசையமைத்த பாடல் களையும் சேர்த்துள்ளோம்.
“காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப் படையில் பாடல்களை தேர்ந் தெடுத்துள்ளோம். அப்பாவின் பாடல்களுக்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த உள்ளேன்,” என்று கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.
மேலும், இரண்டு திரைப்படங்களுக்கு தாம் இசையமைத்து வருவதாகவும் தனது இசையில் உருவான பாடல்களையும் கோவை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக திரைப் படப் பாடல்களுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக இளையராஜாவுக்கும் வேறு சில தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் இளையராஜா. இந்நிலையில், அவரது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்த தந்தையின் அனுமதியைக் கோரி உள்ளதாக கார்த்திக் ராஜா தெளிவுபடுத்தி உள்ளார்.

