நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள புதிய படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியீடு காண உள்ளது.
அபிராமு இயக்கியுள்ள இப்படத்தில் விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராம், சத்திய பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
“இந்தப் படம் குறித்த தகவல்களை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் வெற்றிகரமாக திரை அரங்குகளில் வெளியாகி இருக்கக்கூடும்.
“இப்படத்துக்கு ‘சட்டம் என் கையில்’ என்ற தலைப்பை தேர்வு செய்த உடனேயே சிக்கல் முளைக்கக்கூடும் என்று சிலர் கவலை தெரிவித்தனர். எனினும் 1978ல் கமலஹாசன் நடித்த ‘சட்டம் என் கையில்’ படத்துக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. தலைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
“எதை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கக்கூடிய அதிகாரம் படைத்த ஒரு ஜமீன்தார் குடும்பத்துக்கும் நீதிக்காகப் போராடும் ஏழைப் பெண்ணுக்கும் இடையேயான மோதல்தான் கதை.
“தனி ஒருவராக சட்டத்தின் முன் போராடி தன் கையால் தீர்ப்பு கொடுத்த வீரதீர பெண்ணின் கதைக்கு சாய் தன்ஷிகா மிகப் பொருத்தமானவராக இருந்தார். நூறு விழுக்காடு உழைப்பையும் தந்துள்ளார்,” என்கிறார் இயக்குநர்.

