சாதனைப் பெண்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்த விரும்பும் டாப்சி

சாதனைப் பெண்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்த விரும்பும் டாப்சி

1 mins read
81b73f63-d11d-45aa-a0e9-70ed0d0db436
டாப்சி. - படம்: ஊடகம்

விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் புதுப் படங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் நடிகை டாப்சி.

தாம் நடிக்க வந்த புதிதில், இந்தித் திரையுலகில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா பிரபலமாக இருந்ததாகவும் அதனால் அவரைப்போல் தோற்றமளிக்க விரும்பியதாகவும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், 11 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகமான போதிலும், தனி நாயகியாக நடிப்பதற்கு முன்பு பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

விளையாட்டு வீராங்கனைகள் மட்டுமல்லாமல், அனைத்துத் துறையிலும் உள்ள சாதனைப் பெண்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறாராம் டாப்சி.

குறிப்புச் சொற்கள்