’மீசைய முறுக்கு’ படத்தில் ‘ஹிப்ஹாப்’ ஆதியின் இளைய சகோதரராக நடித்த ஆனந்த், தற்போது இயக்கும் படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இவர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் புதுப் படத்தை தானே இயக்கி அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
பள்ளி காலத்தில் இருந்து ஒன்றாகச் சுற்றித் திரியும் நண்பர்கள், வாழ்க்கையின் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றுவிடுகிறார்கள். எனினும் இதனால் ஏற்படும் வெற்றிடத்தை இன்னொரு நண்பர் வந்து நிரப்பிவிடுகிறார். அதன் பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் கதையாம்.
1992 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அனைத்து சம்பவங்களும் நடப்பதுபோல் திரைக்கதையை அமைத்துள்ளாராம்.
“ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த ‘முஸ்தஃபா’ பாடலை அவரது அனுமதியுடன் பயன் படுத்தி உள்ளோம். தனுஷ், ஜி.வி.பிரகாஷும் பாடியுள்ளனர்,” என்கிறார் ஆனந்த்.

