திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இணையத் தொடர்களிலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் யோகி பாபு.
தற்போது ராதா மோகன் இயக்கும் ‘சட்னி சாம்பார்’ இணையத்தொடரில் அவரை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதில் கயல் சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், நிழல்கள் ரவி, மைனா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஜீஸ் இசையமைக்கிறார்.
“நகைச்சுவை நிறைந்த, குடும்பத்துடன் பார்த்து மகிழ பொருத்தமான இணையத்தொடராக உருவாகி உள்ளது,” என்கிறார் இயக்குநர் ராதா மோகன்.
இவர் ஏற்கெனவே ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பொம்மை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இந்நிலையில், மாறுபட்ட கதைக்களத்தில் யோகி பாபுவுக்கு ஏற்ற கதாபாத்திரத்துடன் களமிறங்கி உள்ளார் ராதா மோகன்.
யோகி பாபுவுடன் வாணி போஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘சர்தார்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களுக்கு வசனங்களை எழுதிய பொன்.பார்த்திபனும் இக்குழுவில் இணைந்துள்ளார்.

