நூற்றாண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் ‘காலா’

நூற்றாண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் ‘காலா’

1 mins read
4e18dc51-813e-4a69-9d56-dd6fda9af1e0
‘காலா’ படத்தில் ரஜினி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இந்நூற்றாண்டின் ஆகச்சிறந்த படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

தனியார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

‘ஓல்டு பாய்’, ‘கெட் அவுட்’, ‘ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ்’ உள்ளிட்ட 25 படங்கள் கொண்ட இப்பட்டியலில், ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய திரைப்படம் ‘காலா’தான்.

கடந்த 2018ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் ஹூமா குரேஷி, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்