தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படபிடிப்புக்காக அஸர் பைஜான் நாட்டில் உள்ளார் அஜித்.
அங்கு சில சண்டைக்காட்சிகளையும் இரண்டு பாடல்களையும் படமாக்கி வருகின்றனர். அடுத்த ஒரு மாதகாலம் படக்குழுவினர் ‘அஸர்பைஜான்’ நாட்டில்தான் தங்கியிருப்பார்களாம்.
இந்நிலையில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் காணொளி ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இதையடுத்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த முடிவு செய்துள்ளார் அஜித்.
அதன்படி கார் பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் திடலில் அவர் கார் ஓட்டி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக அஜித் அந்த காரை இயக்கி உள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

