முதன்முறையாக ஷாருக்குடன் நடிக்கும் சமந்தா

முதன்முறையாக ஷாருக்குடன் நடிக்கும் சமந்தா

1 mins read
fc68e54d-42a9-45eb-83b2-db13629c5f45
ஷாருக்கானுடன் சமந்தா. - படம்: ஊடகம்

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறார் சமந்தா.

தற்போது இந்திப் படம் ஒன்றில் ஷாருக்கானுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘டங்கி’ இந்திப் படம் 500 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

ஷாருக்கானுடன் சமந்தா முதன்முறையாக ஜோடி சேரும் படத்தையும் இவர்தான் இயக்க உள்ளார்.

இது தேச பக்தியை வலியுறுத்தும் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. சண்டைக் காட்சிகள் மிகுந்திருக்குமாம்.

சமந்தா கடைசியாக 2023ஆம் ஆண்டு ‘குஷி’ படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதையடுத்து இணையத் தொடர்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்