சோகத்தில் மூழ்கியுள்ள கள்ளக்குறிச்சிக்கு ஆறுதல் தந்த ‘சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் ஜான்

சோகத்தில் மூழ்கியுள்ள கள்ளக்குறிச்சிக்கு ஆறுதல் தந்த ‘சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் ஜான்

1 mins read
c641d234-8936-45c8-9070-ae2ddd02e3bf
‘சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் ஜான். - படம்: ஊடகம்

சென்னை: கள்ளச் சாராய விவகாரத்தால் கண்ணீரும் கம்பலையுமாக காட்சி அளித்து வந்த கள்ளக்குறிச்சி மக்களுக்கு சிறிய ஆறுதல் கிடைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் நடப்பாண்டு வெற்றியாளராக ஜான் தேர்வு செய்யப்பட்டார்.

இவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி பகுதியாகும்.

“சிறிய ஊரில் பிறந்த என்னை யாருக்கும் தெரியாது. உள்ளூரிலேயே நான் தெருவில் நடந்து சென்றால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

“ஆனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அனைவரையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

“தொடர்ந்து நல்ல பாடல்களைப் பாடி மக்களை மகிழ்விப்பேன்,” என்றார் வெற்றியாளர் ஜான்.

கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.

கடந்த மூன்று நாள்களாக கள்ளக்குறிச்சி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கி உள்ளது.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பாடகர் ஜான், சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றதன் மூலம் கள்ளக்குறிச்சி மக்களுக்கு, இந்த சோகமான நேரத்தில் ஆறுதல் அளித்துள்ளார் ஜான்.

குறிப்புச் சொற்கள்