திருமணத்துக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை சாயிஷா.
நடிகர் ஆர்யாவுடன் காதல் வயப்பட்டதையடுத்து திருமணம் செய்து கொண்ட இவர், திரையுலகை விட்டு விலகியிருந்தார். இருவருக்கும் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடி இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து மீண்டும் நடிக்க விரும்பிய தன் மனைவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆர்யா. இயக்குநர்கள் பலர் சாயிஷாவிடம் கதை கூறி வருகின்றனர்.

