ஒரே சமயத்தில் இரு படங்கள்: ராஷ்மிகா உற்சாகம்

ஒரே சமயத்தில் இரு படங்கள்: ராஷ்மிகா உற்சாகம்

1 mins read
2d8205f1-bd3e-4e32-9479-cf11886e6cff
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

தமது நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது இரட்டிப்பு உற்சாகத்தை தந்துள்ளது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.

இவர் நாயகியாக நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தின் வெளியீடு டிசம்பர் 6ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியில் இவர் நடித்துள்ள ‘சாவ்வா’ படமும் அதே நாளில் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னதான் ‘புஷ்பா 2’ வெளியீடு தாமதமானது வருத்தம் அளித்தாலும், இந்திய அளவில் அனைத்து மொழிகளுக்கும் ஏற்ற படமாக உருவாகி உள்ளதாம்.

‘சாவ்வா’ இந்திப் படத்தில் விக்கி கௌசலுடன் இணைந்துள்ளார் ராஷ்மிகா. இரு படங்களின் வெற்றி தோல்வியை அடிப்படையாக வைத்துத்தான் திரையுலகில் தமது அடுத்த கட்டத்தை ராஷ்மிகா தீர்மானிப்பார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்