பலரும் பாலியல் தொல்லை தந்தனர்: இஷா

பலரும் பாலியல் தொல்லை தந்தனர்: இஷா

படம்: ஊடகம்

24 Jun 2024 - 12:32 pm

1 mins read

திரை உலகில் அறிமுகமான நாளில் இருந்தே பல்வேறு பாலியல் தொல்லைகளை தாம் எதிர்கொண்டதாக நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.

தாம் 18 வயதில் நடிக்க வந்ததாகவும் அச்சமயம் முன்னணி நாயகனாக இருந்த ஒருவர் தம்மை தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“தம்மைச் சந்திக்க வரும்போது கார் ஓட்டுநரை அழைத்து வர வேண்டாம் என்றார் அந்த முன்னணி நடிகர். ஆனால் அவரது அழைப்பை நான் ஏற்கவில்லை.

“இதேபோல் பல நடிகர்கள் என்னிடம் ஆபாசமாகப் பேசியுள்ளனர். வேண்டுமென்றே தொட்டுப்பேசும் பலரைச் சமாளிக்க வேண்டி இருந்தது. இப்படியெல்லாம் நடந்துகொண்டால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என ஆலோசனை கூறியவர்களும் உண்டு.

“தமிழில் நான் நடித்த ‘காதல் கவிதை’ படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. ‘என் சுவாசக்காற்றே’ படமும் நல்ல திருப்பு முனையைக் கொடுத்தது,” என்கிறார் நடிகை இஷா கோபிகர்.

குறிப்புச் சொற்கள்
நடிகைபாலியல்நடிகர்