மிகச்சிறந்த அனுபவம் கிடைத்தது: ரகுல்

மிகச்சிறந்த அனுபவம் கிடைத்தது: ரகுல்

1 mins read
ca86a5d1-cacc-4b08-a026-7910e8536023
ரகுல் ப்ரீத் சிங். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இந்தியத் திரையுலகின் ஆகப் பெரிய இயக்குநரான சங்கருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு தாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார் நடிகை ரகுல் ப்ரீத்சிங்.

இயக்குநர் சங்கர் தனது கதாபாத்திரங்களைப் பார்க்கும் விதமும் படப்பிடிப்பின்போது அவரது நுணுக்கமான செயல்பாடுகளும் தம்மை பிரமிக்க வைத்துள்ளதாக பேட்டி ஒன்றில் ரகுல் குறிப்பிட்டுள்ளார்.

“‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளம் மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பின்போது எதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்,” என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியீடு காண்கிறது.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்