நடிகர் விஜய் தனது 69வது படத்தில் கரை வேட்டி, தோளில் துண்டுடன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவர் இரண்டு தோற்றங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் விஜய்யின் 69வது படத்தை எச்.வினோத் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
இது அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகும் படம். விஜய் கரை வேட்டியுடன் காணப்படுவார் என்றும் தெரிகிறது.
அநேகமாக 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இந்தப்படம் திரைகாணக்கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

