‘அரண்மனை 4’ படம் வசூல் ரீதியில் வெற்றிகண்டது தெரிந்த சேதிதான்.
எனினும் இப்படத்தில் நாயகிகளாக நடித்த ராஷி கன்னாவுக்கும் தமன்னாவுக்கும் இடையே தொழில் ரீதியில் போட்டி அதிகரித்துவிட்டது என்றும் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டுற்கு ராஷி கன்னாவை அழைத்து விருந்து அளித்துள்ளார் தமன்னா.
அதன் பின்னர் தனக்கும் ராஷி கன்னாகாவுக்கும் இடையே தொழிற் போட்டி இருப்பது உண்மைதான் என்றாலும் தனிப்பட்ட வகையில் ஆகச்சிறந்த தோழிகள் எனக் கூறியுள்ளார் தமன்னா.
மேலும் போட்டி இருந்தால்தான் தொழிலில் முன்னேற்றமும் இருக்கும் என்று தத்துவார்த்தமாக வாகவும் கூறியுள்ளார் தமன்னா.

