தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டும் ருக்மணி வசந்த்

1 mins read
2ce9f247-e916-4c76-8e16-e1279404c492
ருக்மணி வசந்த். - படம்: ஊடகம்

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை தென்னிந்தியப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்கிறார் ருக்மணி வசந்த்.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ருக்மணி வசந்த், தமிழில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘ஏஜ்’ படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு புதுப் படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் கலாசாரம் குறித்து தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நடிகை ருக்மணி வசந்த், ‘கே.ஜி.எப்’, ‘காந்தாரா’, ‘புஷ்பா’ உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு அனைவரது பார்வையும் தென்னிந்தியப் படங்கள் பக்கம் திரும்பி இருப்பதாகச் சொல்கிறார்.

வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதாகவும் நடிகை ருக்மணி வசந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் ஆசிரியையாகி இருப்பேன் என்றும் கூறியுள்ள அவர், “திரையுலகில் அறிமுகமான பின்பு எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறிப் போய்விட்டது. எனது முதல் படத்திலிருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

“நான் தற்போது தமிழ்மொழிப் படங்களில் நடித்து வருவதால் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்வதிலும் தமிழ் கலாசாரத்தை தெரிந்துகொள்வதிலும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறேன்,’’ எனக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்