நடிகர் பிரசாந்தின் நடிப்பில் உருவாகி உள்ள ‘அந்தகன்’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியீடு காண உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு இப்படம் தொடங்கப்பட்டது. பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கி உள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையிலும் இப்படம் திரை காணவில்லை.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் ‘அந்தகன்’ படத்தை திரையில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்திலும் பிரசாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


