கொண்டாடக் காத்திருக்கும் ரசிகர்கள்

1 mins read
ddf0eb30-af44-4833-8413-9279a4e4a568
‘ராயன்’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

தனுஷ் நடிப்பில் அவரது 50வது படமாக ‘ராயன்’ உருவாகி உள்ளது. இப்படத்தை அவரே இயக்கியும் உள்ளார்.

இந்நிலையில், இப்படம் ஜூலை 26ஆம் தேதி வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயகியாக துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன் ஆகியோருடன் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

வரும் ஜூலை 26ஆம் தேதி பட வெளியீட்டை தனுஷ் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்