‘மாஸ்க்’ படத்தில் கவினுக்கு இரண்டு நாயகிகள்

‘மாஸ்க்’ படத்தில் கவினுக்கு இரண்டு நாயகிகள்

1 mins read
7e5360f7-8736-4f8f-908a-69f7d80645be
ருஹானி. - படம்: ஊடகம்

நடிகர் கவினுக்குத் தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ என்ற படத்தில் அவர் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஆண்ட்ரியா நாயகியாக ஒப்பந்தமானார்.

இந்நிலையில், ருஹானி சர்மா என்பவரும் நாயகியாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ் சினிமாவுக்குப் புதியவரல்ல. ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘கடைசி பெஞ்ச் கார்த்திக்’ என்ற படத்தில் நடித்தவர். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இப்போது ‘மாஸ்க்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ள இவர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவின் நெருங்கிய உறவினர் ஆவார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைஒப்பந்தம்நடிகர்