அமெரிக்கப் பட விழாவில் திரைகாணும் ‘மகாராஜா’

அமெரிக்கப் பட விழாவில் திரைகாணும் ‘மகாராஜா’

1 mins read
b812fec9-04b3-42db-bef2-6be08015af07
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ படம் விமர்சகர்களின் ஒட்டுமொத்த பாராட்டைப் பெற்றதுடன், வசூலிலும் சாதித்துள்ளது.

இப்படக் குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. மேலும் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘உள்ளொழுக்கு’ படமும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

விழாவில் பங்கேற்க ‘மகாராஜா’ படக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், தொடர் படப்பிடிப்புகள் காரணமாக விஜய் சேதுபதி இங்கு செல்லவில்லை. எனினும், ‘உள்ளொழுக்கு’ படத்தில் நடித்த பார்வதி, ஊர்வசி இருவரும் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் சென்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்