ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள ‘பென்ஸ்’ என்ற புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் ஃபகத் ஃபாசிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தெலுங்கு, தமிழில் நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியங்கா.

