குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களை வெளியிட போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை எனத் தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தமிழில் புதுப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை.
‘கல்கி 2898 ஏடி’ படம் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியானதால் மற்ற படங்கள் ஒதுங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் குறைந்த செலவில் படங்களை உருவாக்க யாரும் முன் வரமாட்டார்கள் எனக் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டில் தமிழில் இதுவரை 115 படங்கள் வெளிவந்துள்ளன.

