மீனாவைச் செல்லமாக மிரட்டிய பிரபு

1 mins read
0bf03097-2e22-4d69-b67c-07f1c006b8b9
படங்கள்: - ஊடகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமல்ல பிரபுவுடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் மீனா. வளர்ந்த பிறகு அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்தார் மீனா.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சூப்பர் ஸ்டாரை ரஜினி அங்கிள்னு என அழைத்தார் குழந்தை நட்சத்திரமான மீனா. வளர்ந்த பிறகு அவருக்கு ஜோடியாக எஜமானில் நடித்தார். இதே போல் பிரபு, கமல்ஹாசன் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் மீனா.

பிரபுவுக்கு ஜோடியாக நடித்தபோது நடந்த சம்பவம் பற்றி மீனா தற்போது பேசியிருக்கிறார்.

அதில், ஒருமுறை படப்பிடிப்புத்தளத்தில் பிரபுவிடம் சென்று, “நான் உங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கிறேன் சார்,” என மீனா கூறியிருக்கிறார்.

“அதை கேட்ட பிரபு என் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது, சொன்னா அவ்வளவுதான்,” என மீனாவைச் செல்லமாக மிரட்டியிருக்கிறார் பிரபு. விஷயம் வெளியே தெரிந்தால் தன் வயது தெரிந்துவிடும் என்பது பிரபுவின் கவலையாக இருந்ததாம்.

13 வயதில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய மீனா கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். 

குறிப்புச் சொற்கள்