ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இருப்பினும், வெளியிடும் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அதே தேதியில் சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகும் என அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாவது உறுதியானால் ரஜினி, சூர்யா ஆகிய இருவரின் திரைப்படங்கள் மோதிக் கொள்ளும் முதல் முறை இதுவாகத்தான் இருக்கும்.

