எனக்குத் தெரியாமல் சில தவறுகள் செய்துள்ளேன்: சமந்தா

1 mins read
92f6f3e7-48d5-4a8f-8a50-4ded8a817c69
படம்: - ஊடகம்

ஆரோக்கியம் தொடர்பான காணொளிகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் நடிகை சமந்தா. இந்த நிலையில் ரசிகர் ஒருவர், “இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா? என்று சமந்தாவிடம் கேட்டார். அதற்கு, ‘‘இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் முழுமையாக எனக்குத் தெரியாமல் செய்தவை. அதன் பிறகு அவற்றை விளம்பரம் செய்வதை முழுமையாக நிறுத்தி விட்டேன். இப்போது எதை செய்கிறேனோ அதைப்பற்றி மட்டும்தான் பேசுகிறேன்,’‘ என்றார் சமந்தா.

இதற்கிடையே, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள கடைசி திரைப்படமான தளபதி 69ல் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்