விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நேசிப்பாயா’ படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் அதிதி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
இது முழுநீள காதல் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த விஷ்ணுவர்த்தனுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் அதிதி.
“முதன் முறையாக காதலை மையப்படுத்தி உருவான படத்தில் நடித்துள்ளேன். என் மீது இயக்குநர் விஷ்ணுவர்த்தன் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். எனவே என்னால் இயன்ற அளவு உழைத்துள்ளேன். இந்தப் படமும் என் நடிப்பும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்,” என்கிறார் அதிதி சங்கர்.
காலஞ்சென்ற நடிகர் முரளிக்கு அளித்த ஆதரவை மகன் ஆகாஷுக்கும் அளிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிதி.

