நடிகை தமன்னா குறித்து பள்ளிப் பாடப் புத்தகத்தில் விவரங்கள் சேர்க்கப்பட்டதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமன்னாவின் வாழ்க்கைக் குறிப்புகளை தங்கள் குழந்தைகள் எதற்காக படிக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார் தமன்னா. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் பள்ளி, ‘சிந்தி மக்களின் வாழ்க்கை’ என்ற தலைப்பில், ஏழாம் வகுப்புக்கான பாடப் புத்தகத்தில் ஒரு பாடத்தைச் சேர்த்துள்ளது.
அதில், சிந்தி மக்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இனத்தைச் சேர்ந்த நடிகை தமன்னாவின் வாழ்க்கைக் குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதை அறிந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள ஆங்கில வழிப் பள்ளி நிர்வாகங்களுக்கான சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து ஏராளமானோர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

