காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்த் தற்போது மூன்று புதுப்படங்களில் தோன்ற உள்ளார்.
விஜய் நடிக்கும் ‘கோட்’, விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’, விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘படைத்தலைவன்’ ஆகிய மூன்று படங்களில் விஜயகாந்த் தோன்றும் சில காட்சிகள் இடம்பெற உள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
“விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதே அவரை என் படத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டேன்.
ஆனால் அப்போது அது சாத்தியமாகவில்லை. இப்போது செயற்கை நுண்ணறிவு கைகொடுத்துள்ளது,” என்கிறார் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இயக்குநர் விஜய் மில்டன்.

