புதுப் படங்கள்: இன்ப அதிர்ச்சி தரும் கார்த்தி

1 mins read
7f6a8184-a959-41fb-8ac2-b59e7e4dcbb6
‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி. - படம்: ஊடகம்

நடிகர் கார்த்தி அதிக விளம்பரங்கள் இன்றி சில படங்களில் நடித்து வருகிறார். அவை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இருக்கும் என அவரது தரப்பு கூறுகிறது.

தற்போது ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் கார்த்தி.

இயக்குநர் தமிழ், ‘ஜெய் பீம்’, ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார். நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்த எண்ணம் தோன்றியதும், உடனடியாக ஒரு புதுப் படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதி முடித்த தமிழ் நேரடியாக கார்த்தியைத்தான் சந்தித்துப் பேசினாராம்.

நடிகர் சூர்யா எப்போதுமே ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அடுத்த படம் குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்று கோடம்பாக்கத்தில் கூறுவர்.

கார்த்தியும் தனது அண்ணனைப் போன்றுதான் செயல்பட்டு வந்தார். ஆனால் திடீரெனக் கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ‘மெய்யழகன்’, ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகி உள்ளது. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

அது வெற்றி பெற்ற பின்னர், கார்த்திக்கு ஏற்ற ஒரு கதையை தயார் செய்யுமாறு இயக்குநர் தமிழிடம் கேட்டுக்கொண்டாராம் பிரபு.

கார்த்தியும் தமிழும் சந்தித்துப் பேச, பட வேலைகளும் தொடங்கிவிட்டன. எதிர்வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குமாம்.

குறிப்புச் சொற்கள்