நாயகனாக அறிமுகமாகும் ‘பிக் பாஸ்’ ராஜு

1 mins read
4eeefb0a-b952-42d1-acc4-ce110b5ef823
‘பிக் பாஸ்’ ராஜு. - படம்: ஊடகம்

‘பிக் பாஸ்’ வெற்றியாளர் ராஜு, தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவர் நடிக்கும் படத்துக்கு ‘பன் பட்டர் ஜாம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷன், முகேன், ஆரவ், ஹரிஷ் கல்யாண், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் திரையுலகில் கதாநாயகர்களாக அறிமுகமாகி உள்ளனர். இவர்களில் ஆரவ், ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் மெல்ல காலூன்றி வருகிறார்கள்.

ஆரவ் ‘கலகத்தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்து பெயர் வாங்கியுள்ள சூழலில், ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்களுடைய வழியைப் பின்பற்றி நாயகனாக அறிமுகமாகிறார் ராஜு.

அவர் அறிமுகமாகும் ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தை ராகவ் இயக்குகிறார். இன்றைய நவீன யுகத்தில் இளையர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதையாம்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தைப் போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தரப்பு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்