நடிகை இனியா மீண்டும் நாயகியாக நடிக்கும் புதிய படம் ‘சீரன்’.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நடித்தும் உள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். துரை கே.முருகன் இயக்கியுள்ள படத்தில் சோனியா அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில்தான் இனியாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார் இனியா.
இந்நிலையில், தமக்கு வாய்ப்பு கொடுத்துள்ள ஜேம்ஸ் கார்த்திக்குக்கு நன்றி தெரிவித்துள்ளார் இனியா.
“சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து இந்தப் படத்தில் அலசப்படுகிறது. மனிதனுக்கான சம உரிமைகள் குறித்தும் இந்தப் படம் உரக்கப் பேசும். அழகான வணிகத் திரைப்படமாக உருவாகி உள்ளது. இது அனைவரும் பார்க்க வேண்டிய படம்,” என்கிறார் இனியா.

