வெளியீடு காணும் முன்பே விருதுகளைப் பெற்று வருகிறது ‘கொட்டுக்காளி’. இப்படத்தை ‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.
சூரி நாயகனாகவும் அன்னாபென் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் வெளியீடு காணத் தயாராகிவிட்ட போதிலும், அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிட்டு வருகின்றனர்.
74வது ‘பெர்லின்’ திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டுக்கான ‘டிரன்சில்வேனியா’ திரைப்பட விழாவில் பங்கேற்ற இப்படத்திற்கு நடுவர்கள் சிறந்த படத்துக்கான விருதை அறிவித்தனர்.
இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘கொட்டுக்காளி’க்குச் சிறந்த கற்பனைப் பிரிவின்கீழ் சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

