ஒருவழியாக ‘இந்தியன் 2’ படம் வெளியீடு காண உள்ள நிலையில், அதன் இயக்குநர் சங்கர், தனது அடுத்த படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
அவர் ‘இந்தியன்’ படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த படம் தொடர்பாக, மூன்று திட்டங்களை சங்கர் வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
சரித்திரக் கதை, ஜேம்ஸ் பாண்ட் போன்ற உளவாளிகள் சம்பந்தப்பட்ட கதை, முழுநீள அறிவியல் படம் எனத் திட்டமிட்டு அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று கதைகளையும் படமாக்க பெரும் தொகை தேவைப்படுமாம். ஹாலிவுட் படங்களை விஞ்சும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல காட்சிகள் உருவாக்கப்படும் என்று சங்கர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

