பிரபுதேவா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’. இதை ஏ.ஜே.பிரபாகரன் தயாரிக்க, ஜே.எம்.ராஜா இயக்குகிறார்.
பவ்யா ட்ரிகா நாயகியாக நடிக்க, ஹரி சங்கர், ஸ்ரீமன், சித்ரா லட்சுமணன், தேனப்பன் ஆகியோரும் உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
“ஒரு போக்குவரத்துக் காவலர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இதை நகைச்சுவையுடன் விவரிக்க உள்ளோம்.
“சென்னையில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பை அடுத்து, படக்குழுவினர் கோவையில் முகாமிட உள்ளோம்,” என்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா.