மூன்று வீடுகளை அடமானம் வைத்த நடிகை தமன்னா

மூன்று வீடுகளை அடமானம் வைத்த நடிகை தமன்னா

1 mins read
9430afbc-1e79-457e-b5af-22dc4173f866
நடிகை தமன்னா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் மட்டுமன்றி இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா.

கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடலுக்குத் தமன்னா ஆடிய குத்தாட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது.

தமன்னா தற்போது மும்பை ஜுஹு தாரா பகுதியில் 6,065 சதுர அடி கொண்ட அலுவலகம் ஒன்றை மாதம் ரூ.18 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தத்தை போட்டு, ரூ.75 லட்சத்தை வைப்புத்தொகையாகச் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து தமன்னா அந்தேரி வீர் தேசாய் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனக்குச் சொந்தமான மூன்று வீடுகளை இந்தியன் வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்.

இதற்காக ரூ.4.70 லட்சத்துக்கு முத்திரைக் கட்டணமும் செலுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமன்னா தற்போது ஜான் ஆபிரகாமுடன் ‘வேதா’ படத்திலும் ஸ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் ‘ஸ்த்ரீ 2’, தெலுங்கில் ‘ஒடேலா 2’ படத்திலும் நடித்து வருகிறார்.

‘வேதா’ ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்