இதுவரை பார்த்திராத பேய் படமாக உருவாகி உள்ளது ‘பார்க்’

1 mins read
c1e315d2-5b99-42ef-a8ac-d21d10d1e935
‘பார்க்’ படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி. - படம்: ஊடகம்

‘பார்க்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள புதிய பத்தை 36 நாள்களிலேயே படமாக்கி பாராட்டுப் பெற்றுள்ளார் அறிமுக இயக்குநர் முருகன்.

இவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

‘பார்க்’ படத்தில் தமன் குமார் நாயகனாகவும் ஸ்வேதா நாயகியாகவும் வில்லனாக யோகி ராமும் நடித்துள்ளனர்.

“எத்தனையோ பேய் படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றில் பேய் ஓட்டுவதற்கு ஏதாவது ஒரு சமயத்தைச் சேர்ந்த சாமியார்கள் வருவது போல் காட்டுவார்கள்.

“ஆனால் ‘பார்க்’ படத்தில் எந்த சமயத்தைச் சார்ந்தவரும் பேய் ஓட்டப் போவதில்லை. மாறாக வேறு ஒரு முறையில் அந்தப் பேயை ஓட்டுவது போல் காட்சிப்படுத்தி உள்ளோம். இது ரசிகர்களைக் கவரும்,” என்கிறார் இயக்குநர் முருகன்.

இதுவரை எந்த பேய் படத்திலும் பாத்திராத சில காட்சிகள் ‘பார்க்’ படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இவர் புதிர் போடுகிறார்.

“திகில் படங்களுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு அளிப்பார்கள். எனவே, தயாரிப்பாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்பட்டுவிடாது. அதனால்தான் இப்படிப்பட்ட பேய் கதையை உருவாக்குவது எனத் தீர்மானித்தோம். திட்டமிட்டபடி செயல்பட்டுள்ளோம்,” என்கிறார் இயக்குநர் முருகன். ‘பார்க்’ படம் ஆகஸ்ட் மாதம் திரை காண உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்