ரசிகர்களுக்கு அறிவுறுத்திய திரிஷா

1 mins read
042b5e00-fea3-46a6-bccf-46a2ebc63444
விஜய்யுடன் திரிஷா. - படம்: ஊடகம்

பிறரது கருத்துகளைத் தூக்கிச் சுமக்காதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் நடிகை திரிஷா.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, அண்மையில் இவர் வெளியிட்ட வாழ்த்து பலரது கவனத்தை ஈர்த்தது, கூடவே சில சர்ச்சைகளுக்கும் வித்திட்டது.

அண்மையில் விஜய் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார் திரிஷா. அந்தக் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.

இந்நிலையில், பின்னணிப் பாடகி சுசித்ராவும் இவரைப் பற்றி தெரிவித்த கருத்துகள் விவாதங்களை எழுப்பியுள்ளன.

சுசித்திராவுக்கு மறைமுகமாக பதில் அளிக்கும் வகையில், “பிறர் கருத்துகளைக் கண்டுகொள்ள வேண்டாம்,” என்று அறிவுறுத்துவதுபோல் பதிவிட்டுள்ளார் திரிஷா.

இது சரியான பதிலடி என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்