காதலரைப் பிரிந்த பின்னர் பொது நிகழ்வுகள், இணைய உரையாடல்கள், சமூக ஊடகப் பதிவுகள் என்று பரபரப்பாக உள்ளார் கமல் மகள் ஷ்ருதிஹாசன்.
இந்நிலையில், அண்மையில் சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் அவர் உரையாடினார்.
அப்போது, திருமணம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி எழுப்ப, இதுபோன்ற கேள்விகள் தமக்கு எரிச்சலூட்டுகின்றன என்றும் இவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார் ஷ்ருதி.
திருமணம் வேண்டாம் என்பதே தனது தற்போதைய முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இது 2024ஆம் ஆண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெண்களிடம் அறிவற்ற, தேவையற்ற கேள்விகள் கேட்கப்படுவதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என்பது தெரியவில்லை,” என்று கூறியுள்ளார் ஷ்ருதி.

