நடிகை சிம்ரன் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க இவரை ஒப்பந்தம் செய்துள்ளனராம்.
கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படங்கள் எதிலும் சசிகுமாரைப் பார்க்க முடியவில்லை. ‘அயோத்தி’, அண்மையில் வெளியான ‘கருடன்’ ஆகியவை அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.
இந்நிலையில் ‘குட்நைட்’ படத்தின் இயக்குநர், அடுத்து இயக்கப் போகும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க சிம்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். சசியும் சிம்ரனும் ஜோடியாக நடிக்க உள்ளனர்.
இது முழுக்க முழுக்க குடும்பப் பின்னணியைக் கொண்டு உருவாகும் படமாம். எனவே குடும்பத்துடன் பார்த்து ரசிக்க முடியும் என்கிறது இயக்குநர் தரப்பு.

