இந்தியாவில் சில சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இந்த மாற்றத்தை நடிகை ராஷி கன்னா வரவேற்றுள்ளார்.
புதிய குற்றவியல் சட்டங்களின்படி, சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் பெண்களைச் சீரழிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும்.
இது வரவேற்கப்பட வேண்டிய தண்டனை என்கிறார் ராஷி கன்னா.
“பாலியல் குற்றங்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் விதிக்கப்பட்டால்தான் குற்றச்சம்பவங்கள் குறையும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திப் படத்தில் நடித்து வரும் அவர், தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ளார்.