நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் ‘சார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தில் விமல், சாயாதேவி ஜோடி சேர்ந்துள்ளனர். சித்து இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்துக்காக ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் இணைந்து பாடியுள்ளனர். மனமுறிவுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள பாடல் என்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

